டெல்லியில் பா.ஜனதா முதல்–மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை


டெல்லியில் பா.ஜனதா முதல்–மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 27 Aug 2017 11:15 PM GMT (Updated: 2017-08-21T03:35:18+05:30)

டெல்லியில், பா.ஜனதா முதல்–மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி,

டெல்லியில், பா.ஜனதா முதல்–மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பா.ஜனதா முதல்–மந்திரிகள்

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இந்த மாநிலங்களின் சமூக வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கும் விதமாக 13 மாநில முதல்–மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் 13 முதல்–மந்திரிகளுடன், 6 துணை முதல்–மந்திரிகளும், சில மத்திய மந்திரிகளும் கலந்துகொள்வார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் திட்டங்கள்

ஆலோசனை கூட்டத்தில், மத்திய அரசின் முக்கிய திட்டங்களை மாநிலங்களில் செயல்படுத்துவது குறித்தும், மாநிலங்களின் சமூக வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், முதல்–மந்திரிகள் தங்களது மாநிலங்களில் செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்வார்கள் எனவும் கூறப்படுகிறது.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்த பிறகு பா.ஜ.க. முதல்–மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துவது இது 3–வது முறையாகும். அதே சமயம் பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் உடன் பா.ஜ.க கூட்டணி வைத்து ஆட்சியமைத்த பிறகு நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story