‘முத்தலாக்’ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு


‘முத்தலாக்’ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Aug 2017 11:30 PM GMT (Updated: 2017-08-22T01:33:53+05:30)

மூன்று முறை ‘தலாக்’ (முத்தலாக்) சொல்லி, தங்கள் மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம், முஸ்லிம்களிடையே நிலவி வருகிறது.

புதுடெல்லி,

மூன்று முறை ‘தலாக்’ (முத்தலாக்) சொல்லி, தங்கள் மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம், முஸ்லிம்களிடையே நிலவி வருகிறது. இது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்கக்கோரி, 5 முஸ்லிம் பெண்கள் உள்பட 7 பேர் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது.

விசாரணையின்போது, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்வது பற்றி நாங்கள் விசாரிக்கப் போவதில்லை என்றும், ‘முத்தலாக்’ வழக்கம் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையா? என்பது பற்றி மட்டுமே தீர்ப்பு அளிப்போம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

கடந்த மே 18–ந் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு அளிக்கிறது.


Next Story