மேற்கு வங்காளத்தில் வெள்ளத்தில் சிக்கி 152 பேர் பலியானதாக மம்தா பானர்ஜி தகவல்


மேற்கு வங்காளத்தில் வெள்ளத்தில் சிக்கி 152 பேர் பலியானதாக  மம்தா பானர்ஜி தகவல்
x
தினத்தந்தி 22 Aug 2017 6:55 AM GMT (Updated: 22 Aug 2017 6:55 AM GMT)

மேற்கு வங்காளத்தில் வெள்ளத்தில் சிக்கி 152 பேர் பலியானதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஒருவாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள மால்டா மாவட்டம் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதப்பகுதிகளை முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்று பார்வையிட்டார். கொல்கத்தாவில் இருந்து ரயில் மூலம் சென்ற மம்தா பானர்ஜி, வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.  தண்னீரில் இறங்கி மம்தா பானர்ஜி இறங்கி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். 

மால்டா, உத்தர், டாக்‌ஷின், டினாஜ்பூர், வடக்கு பெங்கால் ஆகிய இடங்களுக்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்ட மம்தா பானர்ஜி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:- “தற்போது வரை மேற்கு  வங்காளத்தில் 152 பேர் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். இது குறைந்த எண்ணிக்கை கிடையாது. 1.5 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பொருட்சேதத்தின் மதிப்பு 14 ஆயிரம் கோடியை தாண்டும். வெள்ள நிவாரண பணிகள் முறையாக செய்யப்படுகின்றன. மத்திய அரசுக்கு வெள்ள சேதம் குறித்த முழுமையான அறிக்கையை அனுப்பி இருக்கிறோம். தேவையான நிதி உதவி மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு கிடைக்கும்  என்று எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். மம்தா பானர்ஜி வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டதை விமர்சித்துள்ள பாரதீய ஜனதா, ”வெள்ள சுற்றுலா” என்று தெரிவித்துள்ளது. 

Next Story