மராட்டியத்தில் கடந்த 7 மாதத்தில் 1618 விவசாயிகள் தற்கொலை


மராட்டியத்தில் கடந்த 7 மாதத்தில்  1618 விவசாயிகள் தற்கொலை
x
தினத்தந்தி 22 Aug 2017 2:59 PM GMT (Updated: 2017-08-22T20:29:23+05:30)

மராட்டியத்தில் கடந்த 7 மாதத்தில் 1618 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர்.


மும்பை, 


மராட்டியத்தில் கடந்த சில ஆண்டுகளாக வறட்சி, பருவம் தவறிய மழையால் விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. 

கடந்த 2 மாதங்களுக்கு முன் முதல் – மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரூ.34 ஆயிரம் கோடி பயிர் கடனை அறிவித்தார். எனினும் அதன்பிறகும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இதுகுறித்து மாநில மறுவாழ்வு மற்றும் மீட்பு துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 7 மாதங்களில் மாநிலத்தில் 1618 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். குறிப்பாக முதல் – மந்திரி பயிர்கடன் அறிவிப்பு வெளியிட்ட பிறகு 462 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

கடந்த 7 மாதத்தில் அதிகபட்சமாக விதர்பா மண்டலத்தில் 737 விவசாயிகளும், மரத்வாடாவில் 536 விவசாயிகளும் தற்கொலை செய்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநில அரசு அதிகாரி ஒருவர் இது குறித்து பேசுகையில் ‘ முதல் – மந்திரி பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பை 2 மாதங்களுக்கு முன்பே வெளியிட்டு இருந்தால் விவசாயிகள் தற்கொலைகள் குறைந்து இருக்கும். எனினும் இனிவரும் காலங்களில் விவசாயிகள் தற்கொலை குறையும்’’ என்றார்.  

Next Story