பாகிஸ்தானுக்கு கண்டிப்பு: டிரம்ப் பேச்சுக்கு இந்தியா வரவேற்பு


பாகிஸ்தானுக்கு கண்டிப்பு: டிரம்ப் பேச்சுக்கு இந்தியா வரவேற்பு
x
தினத்தந்தி 22 Aug 2017 10:15 PM GMT (Updated: 2017-08-23T01:14:16+05:30)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்த நாட்டு மக்களுக்கு செய்தி விடுத்து நேற்று முன்தினம் டெலிவி‌ஷனில் பேசினார்.

புதுடெல்லி,

அப்போது அவர் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பது குறித்து குறிப்பிட்டு கடுமையாக எச்சரித்தார். ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு இந்தியா ஆற்றி வருகிற பங்களிப்பை பாராட்டினார்.

டிரம்பின் இந்த கருத்துக்களை இந்தியா வரவேற்றுள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று கூறுகையில், ‘‘ இந்த கவலைகளை, நோக்கங்களை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை கொண்டு வருவதில் அந்த நாட்டின் அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா ஆதரவு அளிப்பதில் உறுதியாக உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே டிரம்ப், பாகிஸ்தானை கண்டித்துள்ள நிலையில், அந்த நாட்டுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுபற்றி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறுகையில், ‘‘பங்கரவாதத்துக்கு எதிராக முன் வரிசையில் நின்று பாகிஸ்தான் போராடுகிறது’’ என்று குறிப்பிட்டார்.


Next Story