ரயில்வே வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து ஏகே மிட்டல் ராஜினாமா செய்ததாக தகவல்


ரயில்வே வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து ஏகே மிட்டல் ராஜினாமா செய்ததாக தகவல்
x
தினத்தந்தி 23 Aug 2017 9:46 AM GMT (Updated: 2017-08-23T15:15:56+05:30)

ரயில்வே வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து அசோக் மிட்டல் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, 

ரயில்வே வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து ஏகே மிட்டல் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  கடந்த 4 தினங்களில் உத்தர பிரதேசத்தில் இரு இடங்களில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஏகே மிட்டல் ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. 

தனது ராஜினாமா கடிதத்தை ரயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபுவிடம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனாலும் சுரேஷ் பிரபு ஏகே மிட்டலின் ராஜினாமாவை ஏற்கவில்லை என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. 

Next Story