புகழேந்தி ஜெயிலுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கும் வேலையை மட்டும் பார்க்கட்டும் ஆறுக்குட்டி கடும் விமர்சனம்


புகழேந்தி ஜெயிலுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கும் வேலையை மட்டும் பார்க்கட்டும் ஆறுக்குட்டி கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 23 Aug 2017 1:55 PM GMT (Updated: 2017-08-23T19:25:39+05:30)

பெங்களூரு சிறைக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கும் வேலையை மட்டும் புகழேந்தி பார்க்கட்டும் என ஆறுக்குட்டி விமர்சனம் செய்து உள்ளார்.

கோவை


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக தினகரன் ஆதரவாளர்களான 19 எம்.எல்.ஏ.க்கள் அறிவித்து உள்ளனர், ஆளுநரிடமும் கடிதம் வழங்கி உள்ளனர். மேலும் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரை நீக்குவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்து உள்ளார். இது குறித்து கோவை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் இருப்பவர்களை, முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் நீக்க அதிகாரம் கிடையாது. 

1972–ம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக இருந்து கட்சியை வளர்த்து, கட்சிக்காக பலமுறை சிறைக்கு சென்று வந்தவர்களை கட்சிக்காக இதுவரை பாடுபடாதவர்கள் நீக்க முடியாது. பொதுக்குழுவை உடனே கூட்டி இதற்கு சரியான முடிவு கட்ட வேண்டும். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் யாரை சேர்ப்பது, யாரை நீக்குவது என்று கூறட்டும். நாஞ்சில் சம்பத் ஆட்சியை பற்றிய தவறான கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.  

புகழேந்தி கர்நாடகாவில் கட்சியை வளர்க்கும் வேலையை பார்க்காமல், தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றார். 

 “ புகழேந்தி தமிழ்நாட்டில் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்தால் போதும். இல்லையென்றால் கர்நாடகாவுக்கு சென்று, ஜெயிலுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கும் வேலையை மட்டும் பார்க்கட்டும்” என்று ஆறுக்குட்டி விமர்சனம் செய்தார். 

Next Story