துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ‘விநாயகர் சதுர்த்தி’ வாழ்த்து


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ‘விநாயகர் சதுர்த்தி’ வாழ்த்து
x
தினத்தந்தி 24 Aug 2017 4:51 PM GMT (Updated: 2017-08-24T22:21:27+05:30)

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

விநாயகர் சதுர்த்தி விநாயகக் கடவுளின் பிறந்தநாளை குறிக்கிறது. நமது நாட்டில், விநாயகர் ஞானம், செழிப்பு, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் பண்புருவமாகக் கருதப்படுகிறார். எந்த ஒரு நல்ல காரியம் தொடங்கும் முன்பும் விநாயகக் கடவுளின் பெயரை உச்சரிப்பது பொதுவான வழக்கம் ஆகும்.

இந்தப் பண்டிகை நம் நாட்டில் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை கொண்டுவரட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story