பஞ்சாப், அரியானா அரசுகளுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்


பஞ்சாப், அரியானா அரசுகளுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம்
x
தினத்தந்தி 25 Aug 2017 10:30 PM GMT (Updated: 25 Aug 2017 9:00 PM GMT)

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சாசவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று அறிவித்தது.

சண்டிகார்,

இதனால் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயங்கர கலவரம் வெடித்தது. இதில் பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது.

இச்சம்பவத்துக்கு பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு, இரு மாநில அரசுகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ‘‘கலவரம் வெடிக்கும் என தெரிந்தும் ஏன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை, கலவரத்தை முன்கூட்டியே ஏன் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை?’’ என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மேலும் குர்மீத் சொத்துகளை முடக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கலவரத்தில் உயிர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அந்த சொத்துகளை விற்று நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இரு மாநில அரசுகளுக்கும் நீதிபதிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.


Next Story