இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி கைது


இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி கைது
x
தினத்தந்தி 26 Aug 2017 8:04 AM GMT (Updated: 2017-08-26T13:34:02+05:30)

இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியை , அமலாக்கத்துறையினர் நேற்றிரவு டெல்லியில் கைது செய்தனர்

பணமோசடி வழக்கில், சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியை, அமலாக்கத்துறையினர் நேற்றிரவு டெல்லியில் கைது செய்தனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர் மீது 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் அமலாக்கத்துறை இரண்டு வழக்குகள் பதிவு செய்தது. இந்த வழக்குகள் மீதான விசாரணைக்கு ஆஜர் ஆவதற்காக அவர் வந்த போது டெல்லியில் வைத்து நேற்றிரவு அதிகாரிகள் கைது செய்தனர்.

 விசாரணைக்கு அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வரி ஏய்ப்பு, ஹவாலா மோசடி, கருப்புப் பண பதுக்கல், உள்ளிட்ட வழக்குகளிலும் வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. கண்காணிப்பு வளையத்தில் மொயின் குரேஷி உள்ளார்.

Next Story