மேற்கு வங்க அரசுடன் கோர்க்கா கட்சிகள் பேச்சுவார்த்தை


மேற்கு வங்க அரசுடன் கோர்க்கா கட்சிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 26 Aug 2017 10:21 AM GMT (Updated: 26 Aug 2017 10:20 AM GMT)

கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அரசுடன் நடைபெறும் பேச்சு வார்த்தையில் பங்கேற்கிறது.

டார்ஜிலிங்

மேற்கு வங்க அரசிடமிருந்து முறையான அழைப்பை பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாக  அறிவித்துள்ளது. இத்தகவலை கட்சியின் மூத்த த் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அமர் சிங் ராய் தெரிவித்தார்.

கடந்த 73 நாட்களுக்காக நடைபெற்று வரும் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தினை ஒட்டி  ஏற்பட்டுள்ள முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.

இப்பேச்சுவார்த்தையில் இதர முக்கிய கட்சிகளான, ஜேஏபி, ஜிஎன் எல் எஃப் மற்றும் ஏ பி ஜி எல் ஆகியனவும் கலந்து கொள்கின்றன. முன்னதாக ஜி என் எல் எஃப் இயக்கம் அரசிடம் பேச்சு வார்த்தைக்கு முறைப்படி அழைக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தது. 

இதனூடே கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் முக்கியத் தலைவரான பினாய் தமங் முதல்வர் மமதா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோர்க்காலாந்து எனும் தனி மாநிலம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார். தமங்கின் கடிதத்திற்கு முன்னதாக அக்கட்சியின் தலைவர் பிமல் குருங் எழுதிய கடிதத்தில் தனி மாநிலம் அமைவதற்கான ‘அரசியல் பேச்சுவார்த்தை’யை கோரியிருந்தார்.


Next Story