முன்பு சர்ஜிகல் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை - ராணுவ இயக்குநரகம்


முன்பு சர்ஜிகல் தாக்குதல் ஏதும்  நடக்கவில்லை - ராணுவ இயக்குநரகம்
x
தினத்தந்தி 27 Aug 2017 11:18 AM GMT (Updated: 2017-08-27T16:48:15+05:30)

ராணுவ தலைமையகம் செப்டம்பர் 29, 2016 ஆம் ஆண்டிற்கு முன்னர் எவ்வித சர்ஜிகல் தாக்குதலையும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

பிடிஐ செய்தி நிறுவனம்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ராணுவ தலைமையகம் 2016 ஆம் ஆண்டிற்கு முன்னர் சர்ஜிகல் தாக்குதல் எதுவும் நடந்ததற்கான ஆவணங்கள் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் நடந்த எல்லைத் தாண்டிய தாக்குதலே முதல் சர்ஜிகல் ஸ்டிரைக் எனும் தீவிரவாதிகளுக்கு எதிரான முதல் தாக்குதல் என்று ராணுவ தலைமையகம் கூறியுள்ளது. 

இந்திய ராணுவம் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரையில் ஏதேனும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியுள்ளதா என்றும் கேட்கப்பட்டதற்கு பதில் தரச் சொல்லி ராணுவ தலைமையகத்திற்கு கேள்வியை அனுப்பியது பாதுகாப்பு அமைச்சகம்.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவே ராணுவ தலைமையகம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முகாம் மீது 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 28-29 ஆம் தேதி நள்ளிரவில் ராணுவம் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தி நான்கு முகாம்களை அழித்தது. இதில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பின்னர் செய்திகள் வெளியாயின.


Next Story