டிடிவி தினகரன் வெளியிலிருந்து திமுகவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது சுப்பிரமணியன் சாமி


டிடிவி தினகரன் வெளியிலிருந்து திமுகவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது சுப்பிரமணியன் சாமி
x
தினத்தந்தி 27 Aug 2017 11:39 AM GMT (Updated: 2017-08-27T17:09:21+05:30)

டிடிவி தினகரன் வெளியிலிருந்து திமுகவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது என பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறிஉள்ளார்.

புதுடெல்லி,

அதிமுக அணிகள் இணைப்பை அடுத்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு என தமிழக அரசியல் களத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, சில நாட்களில் தினகரனும், ஸ்டாலினும் இணைந்து விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பார்கள் என டுவிட் செய்தார். இதனையடுத்து தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,  தினகரனும், ஸ்டாலினும் இணைந்து விரைவில் ஆட்சி அமைப்பார்கள் என்ற சுப்பிரமணிய சுவாமியின் கருத்து, அவரின் சொந்த கருத்து என கூறிவிட்டார். 

இந்நிலையில் டெல்லியில் பேட்டியளித்து பேசிஉள்ள சுப்பிரமணியன் சாமி, தமிழகத்தில் டிடிவி தினகரன் வெளியிலிருந்து திமுகவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் டிடிவி தினகரன் எம்எல்ஏக்களின் ஆதரவு 34 ஆக உயரும். டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் திமுகவை ஆதரித்தால் பதவி பறிபோகாது என கூறிஉள்ளார். 


Next Story