ம.பி.யில் விவசாயிகளை சுட்டுக் கொன்றனர்; அரியானாவில் கலவரத்தை அடக்கமுடியவில்லை மம்தா ஆவேசம்


ம.பி.யில் விவசாயிகளை சுட்டுக் கொன்றனர்; அரியானாவில் கலவரத்தை அடக்கமுடியவில்லை மம்தா ஆவேசம்
x
தினத்தந்தி 27 Aug 2017 12:41 PM GMT (Updated: 2017-08-27T18:10:51+05:30)

அரியானாவில் நிலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என பாரதீய ஜனதா அரசை மம்தா பானர்ஜி விமர்சனம் செய்து உள்ளார்.பாட்னா, 

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக ‘தேஷ் பச்சாவ் பிஜேபி பகாவ்’ (பாஜகவை துரத்துங்கள், நாட்டை காப்பாற்றுங்கள்) என்ற பெயரில் எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டம் பாட்னாவில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பாரதீய ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போதைய நிலையை பாரதீய ஜனதா நிலையை தவறாக கையாண்டது. அரியானாவில் பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து எழுந்த சூழ்நிலையையும் தவறாகதான் கையாளுகிறது பாரதீய ஜனதா. 

“பஞ்ச்குலாவில் என்ன நடக்கிறது என பாருங்கள், அரசினால் நிலையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர்கள்தான் மத்திய பிரதேசத்தில் விவசாயிகளை சுட்டுக் கொன்றனர்.” என கடுமையாக சாடினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வன்முறையை பரப்ப மட்டும்தான் முடியும், ஆனால் ஒன்றைகூட கட்டுப்படுத்த முடியாது, பஞ்ச்குலாவில் தெளிவாகி உள்ளது எனவும் குறிப்பிட்டார் மம்தா பானர்ஜி.
 
முன்னதாக அவர் பேசுகையில் லாலு ஜிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கு வந்து உள்ளேன், இங்கு உள்ள மிகப்பெரிய கூட்டத்திற்கு நான் நன்றி கூறுகின்றேன். “கடைசியாக பதவியேற்பு விழாவிற்கு வந்தேன், அது பீகாருக்காக, நிதிஷ் குமாருக்காக கிடையாது. பீகாரில் ஏற்பட்ட புரட்சிதான் இந்திராவை தோற்கடித்தது, பாரதீய ஜனதாவையும் இது தோற்கடிக்கும்,” என்றார். 

மத்திய அரசுக்கு எதிராக பேசுபவர்களை பயம் காட்ட மத்திய விசாரணை முகமைகளை பயன்படுத்துகிறது எனவும் மம்தா சாடிஉள்ளார். 

Next Story