புதிய இந்தியாவை படைக்க அதிகாரிகள் பணியாற்ற பிரதமர் வேண்டுகோள்


புதிய இந்தியாவை படைக்க அதிகாரிகள் பணியாற்ற பிரதமர் வேண்டுகோள்
x

புதிய இந்தியாவை படைக்க அதிகாரிகள் பணியாற்ற பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

புதுடெல்லி


அவர் 80 கூடுதல் செயலர் மற்றும் இணைச் செயலர்களுடன் உரையாடும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகாரிகள் தங்களின் அனுபவம் குறித்து எடுத்துரைத்தனர். இந்தியாவில் மின்னணு தயாரிப்பு என்பது இனி மருத்துவ கருவிகளை தயாரிப்பதில் கவனம் குவிக்க வேண்டும் என்றார் மோடி.

பழைய சட்டங்கள் தேவைப்படாது என்றால் அவற்றை நீக்கி விட்டு புதிய சட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார் மோடி. மேலும் அதிகாரிகள் நாட்டில் 100 மிகவும் பின் தங்கிய மாவட்டங்களை அடையாளம் கண்டு அவற்றின் மேம்பாட்டை  தேசிய சராசரிக்கு இணையாக உயர்த்த கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பிரதமர்.


Next Story