குர்மீத் ராம் ரகீம்சிங் மீதான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு துணை ராணுவ படையினர் குவிப்பு


குர்மீத் ராம் ரகீம்சிங் மீதான  தண்டனை விவரம் நாளை அறிவிப்பு  துணை ராணுவ படையினர் குவிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2017 3:50 PM GMT (Updated: 2017-08-27T21:20:34+05:30)

குர்மீத் ராம் ரகீம்சிங் மீதான தண்டனை விவரம் நாளை அறிவிக்கபடுவதையொட்டி ரோடக் நகரில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம்சிங், கற்பழிப்பு வழக்கு ஒன்றில் குற்றவாளி என  பஞ்ச்குலா சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஜெகதீப் சிங் தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரம் 28–ந் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து குர்மீத் ராம் ரகீம்சிங் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் பஞ்ச்குலாவில் 20 பேரும், சிர்சாவில் 6 பேரும் உட்பட 36 பேர் பலியாயினர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தநிலையில் குர்மீத் ராம் ரகீம்சிங் மீதான  தண்டனை விவரம் 28–ந் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது.  அரியானா மாநிலம், ரோடக் நகரில், சுனரியா சிறையில், குர்மீத் அடைக்கப்பட்டுள்ளார். குர்மீத்துக்கு வழங்கப்படும் தண்டனையை அறிவிக்க, நீதிபதி  ஜெகதீப் சிங், விமானத்தில் ரோடக்கிற்கு அழைத்து வரப்பட உள்ளார்.

இதையொட்டி நீதிமன்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  நீதிபதிக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  ரோடக் நகரில் அசாம்பாவிதங்கள் ஏற்படமால் இருக்க பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

Next Story