அரியானாவில் பதட்டமான நிலைதான் நீடிக்கிறது, ஆனால் கட்டுக்குள் உள்ளது உள்துறை அமைச்சகம்


அரியானாவில் பதட்டமான நிலைதான் நீடிக்கிறது, ஆனால் கட்டுக்குள் உள்ளது உள்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 28 Aug 2017 6:47 AM GMT (Updated: 2017-08-28T12:17:41+05:30)

அரியானாவில் பதட்டமான நிலையே நீடிப்பதாகவும், ஆனால் கட்டுக்குள் உள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


புதுடெல்லி,

பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டதால் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. வன்முறையில் 31 பேர் பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராமிற்கு இன்று தண்டனை விபரத்தை அறிவிப்பதாக சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது. வன்முறை காரணமாக நீதிமன்றம் சாமியார் அடைக்கப்பட்டு உள்ளது ரோத்தக்கில் உள்ள சிறை வளாகத்திலே நடைபெறும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 

வன்முறை மீண்டும் வெடிக்கலாம் என்ற நிலையில் அரியானா மற்றும் பஞ்சாப்பில் பாதுகாப்பு அதிஉயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. ரோத்தக்கில் ராணுவம் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அரியானாவில் பதட்டமான நிலையே நீடிப்பதாகவும், ஆனால் கட்டுக்குள் உள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அரியானாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளநிலையில் புதுடெல்லியிலும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

“அரியானா டிஜிபி கட்டுப்பாட்டு அறையின் அறிக்கையின்படி, அங்கு பதட்டமான நிலையே காணப்படுகிறது, ஆனால் கட்டுக்குள் உள்ளது. ராணுவம் அணிவகுப்பு நடத்தி உள்ளது,” என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story