கோர்ட்டு அறையில் கண்ணீர் விட்டு அழுத பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் ரகீம்


கோர்ட்டு அறையில் கண்ணீர் விட்டு அழுத பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் ரகீம்
x
தினத்தந்தி 28 Aug 2017 11:21 AM GMT (Updated: 2017-08-28T16:50:45+05:30)

10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதும் சாமியார் குர்மீத் ரகீம் கோர்ட்டில் கண்ணீர் விட்டு அழுது உள்ளார்.சண்டிகார், 


இரு பெண்கள் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று கடந்த வெள்ளியன்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. குர்மீத் ராம் ரகீம்மிற்கு சிபிஐ நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. நீதிமன்ற அறையில் நான் சிக்கவைக்கப்பட்டு உள்ளேன் என கூறி சாமியார் குர்மீத் ரகீம் கண்ணீர் விட்டு அழுது உள்ளார். வன்முறை நேரிடலாம் என அரியானா, பஞ்சாப்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

 இதற்கிடையே ராம் ரகீம் தரப்பில் அரியானா ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. சிறையில் குர்மீத் ராமிற்கு எந்தஒரு சிறப்பு வசதியும் செய்து கொடுக்கப்பட கூடாது எனவும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கோர்க்கு வெளியேவும் சாமியார் குர்மீத் ராம் பெரிய நாடகத்தை நடத்தி உள்ளார். “எனக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை தேவைப்படுகிறது. எனக்கு ஏதாவது நடந்தால் மாநில அரசுதான் காரணம் என்றார்.” இதனையடுத்து டாக்டர் தீபா மீண்டும் ஒருமுறை மருத்துவ பரிசோதனையை நடத்தினார். 

கோர்ட்டு சாமியார் குர்மீத் ராமிற்கு ரூ. 60 ஆயிரம் அபராதமும் விதித்து உள்ளது.

சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு

சிறையில் சிறப்பு வசதிகளை பெற குற்றவாளி குர்மீத் ராம் ரகீமிற்கு ஆதரவாக இருக்க கூடாது, குற்றவாளியை பிற குற்றவாளியை போன்றே நடத்த வேண்டும். சிறையில் பிற கைதிகள் அணியும் ஆடையே குர்மீத் ராம் ரகீமிற்கு வழங்கப்பட வேண்டும், அவருக்கென்று தனி ஆடையெல்லாம் அனுமதிக்க கூடாது என சிறை அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Next Story