சிறையில் இருக்கும் சாமியார் குர்மீத் ராம் ரஹிமின் இருண்ட பக்கம்


சிறையில் இருக்கும் சாமியார் குர்மீத் ராம் ரஹிமின் இருண்ட பக்கம்
x
தினத்தந்தி 29 Aug 2017 7:57 AM GMT (Updated: 2017-08-29T13:27:49+05:30)

சிறையில் இருக்கும் சாமியார் குர்மீத் ராம் ரஹிமின் இருண்ட பக்கம் குறித்து அவரின் முன்னாள் பாதுகாவலர் 18 நிமிட வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இரு பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என கடந்த வெள்ளி கிழமை தீர்ப்பு வழங்கியது.  தண்டனை விவரம் நேற்று  அறிவிக்கபட்டது. அதன் படி  சாமியார் குர்மீத் ராம் ரஹிமிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இதேபோன்று மற்றொரு வழக்கில் ராம் ரஹிமிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  இதனால் சாமியார் ராம் ரஹிமுக்கு இரு வழக்குகளில் தலா 10 வருடங்கள் என மொத்தம் 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

பாலியல் பலாத்கார வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் சிங் குறித்து தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது.அதாவது தன்னுடைய வளர்ப்பு மகளான ஹனிப்ரீத் இன்சானுடன் தகாத உறவு கொண்டார் என அவரின் கணவரான விஷ்வாஸ் குப்தா புகார் அளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாம் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளராக இருந்தேன், 1999ம் ஆண்டு பிரியங்காவுக்கு ஹனிப்ரீத் இன்சான் என பெயர் வைத்தார்.அந்த ஆண்டே எங்களுக்கு திருமணமும் நடந்தது, 2011ம் ஆண்டு ராம் ரஹீம் சிங்கை சந்திக்க சென்றேன்.

அப்போது அவருடைய அறைக்கதவு திறந்திருந்தது, என் மனைவியுடன் தகாத உறவு கொண்டிருந்தார்.என் மனைவியை என்னிடமிருந்து பிரித்துவிட்டார், நாங்கள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஹனிப்ரீத்தையே புகார் அளிக்க வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் பயன்படுத்திய கார்கள் கூட போலியானவை என தெரியவந்துள்ளது. தனது கார்களை அழகாக வடிவமைத்துக்கொள்வதற்காகவே பெரிய  நிலப்பரப்பளவில் பட்டறை ஒன்றை வைத்திருக்கிறார்.

சீறிப்பாயும் ஸ்போர்ட்ஸ் கார்கள் தொடங்கி, செடான், ப்ரீமியம் செடான், எக்ஸிக்கியூடிவ் செடான், லக்ஸூரி செடான் வரை விதவிதமான கார்களை வைத்திருக்கிறார்.

ஆசிரமத்தில் எத்தனையோ கார்கள் இருந்தாலும் குர்மீத் ராம் சிங் விரும்பி ஓட்டுவது `கடவுளின் ரதம்' (Chariot of God) என அவர் பெயரிட்டிருக்கும் இந்தக் காரைத்தான்.

காரில் அமர்ந்தபடியே இவர் ஆற்றும் சொற்பொழிவை பக்தகோடிகள் கேட்பதற்கு வசதியாக, இதயத்தின் வடிவில் இருக்கும் கார் கிரிலின் மத்தியில் ஒரு சின்ன ஒலிபெருக்கியும் பொருத்தியிருக்கிறார்.

இது தவிர, தனது பட்டறையில் Bugatti Veyron உட்பட பல்வேறு கார்களை வடிவமைத்து, பார்ப்பவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்துவார். இவர் தயாரித்த கார்கள் அனைத்தையும் விவசாயப்பணிகள், மருத்துவப்பணிகளுக்காக பயன்படுத்தி வந்துள்ளார்.

குர்மித் ராம் ராகிமின் முன்னாள் மெய்க்காப்பாளர் பீந்த் சிங்கின்  தனியார் டிவிக்கு  முக்கிய சிலதகவல்களை கூறி உள்ளார்.டெரா தலைமைக்கு எதிரான பாலியல் தாக்குதலுக்கு இது மட்டும் ஒரு உதாரணம் அல்ல என கூறி உள்ளார்.

அவர் கொடுத்துள்ள 18 நிமிட வீடியோவில் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு உள்ளார். அதில் அங்குள்ள 300 பெண்  சந்நியாசிகளில்  90 சதவீதம் பேர்   பாலியல் பலாத்காரம்   செய்யபட்டு உள்ளதாக கூறி உள்ளார்.Next Story