தமிழக எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திப்பதில் தவறில்லை - தம்பிதுரை


தமிழக எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திப்பதில் தவறில்லை - தம்பிதுரை
x
தினத்தந்தி 29 Aug 2017 12:37 PM GMT (Updated: 29 Aug 2017 12:37 PM GMT)

தமிழக எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்திப்பதில் தவறில்லை என துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியுடன், துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், மைத்ரேயன் எம்.பி., மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

அதனை தொடர்ந்து அருண்ஜெட்லியை சந்தித்து வெளியே வந்த தம்பிதுரை செய்தியார்களிடம் கூறியதாவது:

தமிழகத்திற்கு வர வேண்டிய 17ஆயிரம் கோடி நிதி தொடர்பாக மத்திய மந்திரி அருண்ஜெட்லியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.  அருண்ஜெட்லியிடம் அரசியல் பேசவில்லை. தமிழக எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரை சந்திப்பதில் தவறில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story