மும்பையில் கன மழை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பிரதமர் மோடி வேண்டுகோள்


மும்பையில் கன மழை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 Aug 2017 2:04 PM GMT (Updated: 2017-08-29T19:34:16+05:30)

மும்பையில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

தென் ராஜஸ்தான் பகுதியில் வீசிவரும் பலத்த காற்றால் மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல ஒடிசாவின் வடக்கு மற்றும் அதையொட்டிய பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதே வானிலை அடுத்த 48 முதல் 72 மணி நேரத்துக்கு தொடரலாம் என  இந்திய வானிலை மைய துணை இயக்குனர் கொசாலிக்கர் கூறியுள்ளார்.

 காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது.   மும்பை மாநகரமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.  மீட்பு பணிகளை அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முடுக்கிவிட்டுள்ளார். வெள்ளம் பாதிப்பு குறித்து தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியதாவது:

மும்பையில் கனமழை பெய்து வருவதால் வெள்ளபாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மராட்டிய மாநிலத்த்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story