சூ கியிக்கு வித்தியாசமாக நினைவு பரிசளித்த மோடி


சூ கியிக்கு வித்தியாசமாக நினைவு பரிசளித்த மோடி
x
தினத்தந்தி 6 Sep 2017 10:12 AM GMT (Updated: 6 Sep 2017 10:12 AM GMT)

பிரதமர் மோடி மியான்மர் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் முன்னாள் அதிபர் ஆங் சாங் சூ கியை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு சிறப்பு நினைவு பரிசு ஒன்றை அளித்தார்.

நை பியீ டாவ் (மியான்மர்)

அது சூ கீ இந்தியாவின் சிம்லாவில் ஆய்வு பட்டம் (டாக்டர்) பெறுவதற்காக அங்குள்ள பிரசித்தி பெற்ற இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடி என்ற நிறுவனத்தில் 1986 ஆம் ஆண்டில் ஆய்வு பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தார். அதன் மூலப்பிரதியை படியெடுத்து அதை சிறப்பு நினைவுப் பரிசாக மோடி சூ கியுக்கு வழங்கினார்.

சூ கியிக்கு இப்போது 72 வயதாகிறது. அவர் டெல்லியில் கல்வி கற்றார். முதலில் இளங்கலை பட்டத்தை ஸ்ரீராம் கல்லூரியில் 1964 ஆம் ஆண்டில் பெற்ற அவர் பின்னர் சிம்லாவில் தனது கணவர் மகன்களுடன் சிறிது காலத்தை கழித்தார். 

மியான்மாரில் ஜனநாயகத்திற்காக போராடியதற்காக ஆங்காங் சூ கியிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்போது அவர் மியான்மரின் ஆலோசகர் எனும் உயர் பதவியில் உள்ளார்.


Next Story