பிற மாநில கல்லூரிகளில் ‘தமிழ் தினம்’ கொண்டாட வேண்டும் -பிரதமர் மோடி


பிற மாநில கல்லூரிகளில் ‘தமிழ் தினம்’ கொண்டாட வேண்டும் -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 11 Sep 2017 10:45 PM GMT (Updated: 11 Sep 2017 9:26 PM GMT)

டெல்லியில் நேற்று நடைபெற்ற மாணவர்கள் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

புதுடெல்லி, 

சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரையாற்றியதன் 125–வது ஆண்டுவிழா, தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடைபெற்ற மாணவர்கள் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது:–

கல்லூரிகளில் பல்வேறு தினங்கள் கொண்டாடுகிறார்கள். ரோஜா தினம் கூட கொண்டாடப்படுகிறது. அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் ஒரு மாநிலத்தில் உள்ள கல்லூரி, பிற மாநிலத்தின் கலாசாரத்தையும் கொண்டாட வேண்டும்.

உதாரணமாக, அரியானாவில் உள்ள கல்லூரியில் ‘தமிழ் தினம்’ கொண்டாடலாம். பஞ்சாபில் உள்ள கல்லூரியில் ‘கேரளா தினம்’ கொண்டாடலாம். அப்போது அவர்களது பாடல்களை பாடி, அவர்களை போலவே உடை உடுத்தலாம். இதுபோன்ற கலாசார பரிமாற்றங்கள், அந்த தினத்தை ஆக்கப்பூர்வமானதாக செய்யும். ‘ஒரே இந்தியா, மாபெரும் இந்தியா’வை உருவாக்க உதவும்.

இவ்வாறு மோடி பேசினார்.

Next Story