‘பிரதமர் வேட்பாளராக தயார்’ அமெரிக்க பல்கலையில் பேசிய ராகுல் காந்தி சிக்னல்


‘பிரதமர் வேட்பாளராக தயார்’ அமெரிக்க பல்கலையில் பேசிய ராகுல் காந்தி சிக்னல்
x
தினத்தந்தி 12 Sep 2017 6:48 AM GMT (Updated: 12 Sep 2017 6:48 AM GMT)

பிரதமர் வேட்பாளராக தயார் என அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிஉள்ளார்.

வாஷிங்டன், 

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் 2 வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று(செவ்வாய்க்கிழமை) கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ‘இந்தியா 70: முன்னோக்கிய பாதையின் பிரதிபலிப்பு’ என்ற தலைப்பில் மாணவர்களிடையே ராகுல்காந்தி பேசினார். அப்போது மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். 

இந்தியாவில் இன்று அமைதிக்கு எதிரான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகிறது என விமர்சனம் செய்த ராகுல் காந்தி; வெறுப்பு, கோபம் மற்றும் வன்முறை நம்மை அழித்துவிடும். எனது பாட்டி மற்றும் தந்தையை வன்முறையால் இழந்தவன். என்னைவிட யார் வன்முறையை சரியாக புரிந்துக் கொள்ளமுடியும்? காங்கிரஸ் கட்சியின் கொள்கை உரையாடல்கள் மூலம் நிகழ்த்தப்படுவது. திணிக்கப்படுவது கிடையாது என்றார். பாரதீய ஜனதா அரசின் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு மட்டும்தான் என்றார். 

இந்தியாவில் நடைபெறும் பல்வேறு சம்பவங்களை பட்டியலிட்டு உரையாற்றிய ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக தயார் என சிக்னல் கொடுத்து உள்ளார். மாணவர்களுடன் உரையாற்றிய போது காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளாராக தாங்கள் தயாரா என ராகுலிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் உரைத்து பேசிய ராகுல் காந்தி, “அதனை செய்வதற்கு நான் முழுவதும் தயார்... காங்கிரஸ் கட்சிதான் இதனை முடிவு செய்யவேண்டும், இதற்கான செயல்முறையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது... இவ்விவகாரத்தில் முடிவு என்பது காங்கிரஸ் கட்சி எடுப்பதுதான்,” என கூறிஉள்ளார். 

2012-ல் காங்கிரஸ் மக்களை நேரடியாக சந்திப்பதிலிருந்து விலகியதவே பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமென்றும் கூறிஉள்ளார் ராகுல் காந்தி.

பாரதீய ஜனதாவை சேர்ந்த 1000 பேர் கம்பியூட்டர் முன்னால் இருந்துக்கொண்டு என்னைபற்றி தவறான தகவல்களை தெரிவிப்பதையே வேலையாக கொண்டு உள்ளனர். நாட்டை வழிநடத்துபவர்தான் இந்த 1,000 பேரையும் வழி நடத்தி வருகிறார். ஒன்பது வருடங்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் போன்றோருடன் காஷ்மீர் பிரச்னையின் போது உடன் இருந்தேன், எங்களுடைய ஆட்சியில் காஷ்மீரில் பயங்கரவாத செயல்பாட்டை ஒழித்தோம், இன்று, காஷ்மீரில் வன்முறைகள் அதிகரித்துவிட்டது என்றார் ராகுல் காந்தி.

Next Story