புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 778 மாணவர்களை வெளியேற்ற உத்தரவு


புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 778 மாணவர்களை வெளியேற்ற உத்தரவு
x
தினத்தந்தி 13 Sep 2017 11:05 AM GMT (Updated: 13 Sep 2017 11:05 AM GMT)

புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 778 மாணவர்களை வெளியேற்றுமாறு இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்து உள்ளது.


புதுடெல்லி,


இந்திய மருத்துவ கவுன்சில் புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கடந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு சென்ற சேர்ந்த 778 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது, மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 7 தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாணவ சேர்க்கையானது நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் நடந்தது என எந்தஒரு ஆதாரமும் காட்டப்படவில்லை என இந்திய மருத்துவ கவுன்சிலின் செப்டம்பர் 7-ம் தேதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

புதுச்சேரி மாநில கவர்னர் கவர்னர் கிரண்பேடி எழுதிய கடிதம் காரணமாக இந்திய மருத்துவ கவுன்சில் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. மாணவ சேர்க்கையில் பணத்திற்கு தகுதியானது தியாகம் செய்யப்பட்டு உள்ளது என கிரண்பேடி குற்றம் சாட்டிஉள்ளார். மோசடி நடைபெற்றது என குற்றம் சாட்டி பெற்றோர்கள் புகார் தெரிவித்தது தொடர்பாக கிரண்பேடி விசாரணைக்கு உத்தரவிட்டதில் கடந்த 2016-ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கு 1,200 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர் என தெரியவந்து உள்ளது. 

நீட் தேர்வு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு கண்டும் காணாதது போல் 778 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

நீட் கட்டாயமானது என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு 2016-ல் அனைத்து மாநிலங்களும் வெற்றிகரமான மாணவர்களின் பட்டியலை தயாரிப்பதற்கான ஆலோசனைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களையும் ‘நீட்’ நுழைவுத்தேர்வு மூலம் தான் நிரப்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 

புதுச்சேரியில் மருத்துவ, பொறியியல் பாடப் பிரிவுகளுக்கான இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

 ஆனால் தனியார் கல்லூரிகள் மாணவர்களை நேரடியாக சேர்க்கிறது, குழுவை நிராகரிக்கிறது என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் மொத்தம் 1,200 மருத்துவ இடங்கள் உள்ளது, இதில் தனியார் கல்லூரிகளிலே அதிகமான இடங்கள் உள்ளது. புதுச்சேரியில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் 283 இடங்கள் உள்ளது, 767 இடங்கள் இந்தியா முழுவதும் இருந்து வரும் மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் கடந்த வருடம் அம்மாநில அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் 280 இடங்கள் நிரப்பப்பட்டது. மீதம் இருந்த மூன்று இடங்கள் மத்திய பட்டியலில் இணைக்கப்பட்டது. இதனையடுத்து 770 ஆக உயரந்தது. அனைத்து இந்திய இட ஒதுக்கீட்டின் கீழ் 770 இடங்களும் மாநில இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 8 இடங்களும் மோசடியாக நிரப்பப்பட்டு உள்ளது என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

புதுச்சேரி மாநில அனைத்து சென்டாக் மாணவர்கள்- பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி கிரண் பேடிக்கு இவ்விவகாரம் தொடர்பாக கிரண் பேடிக்கு கடிதம் எழுதினார். மாணவ சேர்க்கையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் ஒட்டுமொத்த வழிமுறையும் மீறப்பட்டு உள்ளது என நராயணசாமி கூறியிருந்தார். நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டு உள்ளது, மதிப்பெண்களை விட பணம் முன்னுரிமை பெற்று உள்ளது என குறிப்பிட்டு இருந்தார். 

கிரண் பேடி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு எழுதிய கடித்ததில், “தனியார் மருத்துவ கல்லூரிகளின் கையில் தகுதியானது (மெரிட்) பாதிக்கப்பட்டு உள்ளது,” என குறிப்பிட்டு உள்ளார். இந்நிலையில் சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்கள் தவிர்த்து பிற மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்யப்படுகிறது என்ற தகவலை இந்திய மருத்துவ கவுன்சில் செப்டம்பர் 7-ம் தேதி புதுச்சேரி தலைமை செயலாளரிடம் தெரிவித்து உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிற்கு எதிராக மாணவர்கள் கோர்ட்டை நாட முடியும். கடந்த 2016-ம் ஆண்டும் 4 மாநிலங்களில் 519 மாணவர்களின் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்தது, ஆனால் கல்லூரிகள் கோர்ட்டை நாடி தீர்வு பெற்றது. 

கல்லூரிகளின் தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவ கவுன்சில் தவறியது ஏன்? பெற்றோர் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.

லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து குழந்தைகளை கல்லூரிகளில் சேர்ந்த பெற்றோர்கள் இது அநீதியானது என கூறிஉள்ளனர். 

Next Story