தேசிய செய்திகள்

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி + "||" + At least 18 dead as boat heading to Haryana capsizes in Yamuna river

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 18 பேர் பலி
யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பக்பட்டில் யமுனை ஆற்றில் 60 பேருடன் படகு ஒன்று சென்றது .ஆற்றின் நடுப்பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் 12 பேரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணியில், மேலும் 12பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் ஏராளமான உள்ளூர்வாசிகள் குவிந்துள்ளனர். சிறிய படகில் சென்று உள்ளுர் மக்களுடன் சேர்ந்து போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.