இந்தியாவின் உண்மையான நண்பன் ஜப்பான் என்பது இந்த மேடையில் நிரூபணம் ஆகியுள்ளது- பிரதமர் மோடி


இந்தியாவின் உண்மையான நண்பன் ஜப்பான் என்பது இந்த மேடையில் நிரூபணம் ஆகியுள்ளது- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 14 Sep 2017 5:59 AM GMT (Updated: 14 Sep 2017 5:59 AM GMT)

இந்தியாவின் உண்மையான நண்பன் ஜப்பான் என்பது இந்த மேடையில் நிரூபணம் ஆகியுள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

அகமதாபாத்

நாட்டிலேயே முதன்முறையாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் கலந்துகொண்டனர்.

வளர்ச்சி அடைந்த நாடுகளைப் போல இந்தியாவிலும் அதிவேக புல்லட் ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜப்பான் உதவியுடன் நாட்டிலேயே முதன்முறையாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டம் தொடங்கப்படுகிறது. 1லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கு ஜப்பான் 88 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி செய்கிறது. 0.1 சதவீதம் என்ற மிகவும் குறைவான வட்டியில் ஜப்பான் கடன் கொடுக்கிறது. இந்த கடன் தொகையை 50 ஆண்டுகளில் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் 15 ஆண்டு சலுகை காலமும் அளிக்கப்படுகிறது.

மும்பை - அகமதாபாத் இடையே 598 கி.மீ. தூரத்தில் 468 கி.மீ. தூரம் உயர்மட்ட பாதையாகவும் 27 கி.மீ. தூரம் சுரங்கப் பாதையாகவும் 13 கி.மீ. தூரம் தரையிலும் பாதை அமைக்கப்படுகிறது. சுரங்கப் பாதையில் 7 கி.மீ. தூரம் கடலுக்கு அடியில் பாதை அமைய உள்ளது. புல்லட் ரயிலின் வேகம் மணிக்கு 320 கி.மீ. ஆகவும் அதிகபட்ச வேகம் 350 கி.மீ. ஆகவும் இருக்கும்.

இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது.அகமதாபாத் - மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டப்பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

குஜராத், மகாராஷ்டிரா மட்டுமல்ல; நாடே வளர்ச்சி அடைய புல்லட் ரயில் திட்டம் உதவும். இந்தியாவில் விரைவாக புல்லட் ரயில் கொண்டு வர உதவிய ஷின்ஷோ அபேவிற்கு நன்றி. இந்தியாவின் மிகச்சிறந்த நட்பு நாடாக ஜப்பான் எப்போதும் இருக்கும். இந்தியாவின் உண்மையான நண்பன் ஜப்பான் என்பது இந்த மேடையில் நிரூபணம் ஆகியுள்ளது. புல்லட் ரெயில் திட்டத்தினால் குஜராத் - மகாராஷ்டிரா மட்டுமில்லாமல் நாடே வளர்ச்சி பெறும்.  புல்லட் ரயில் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

புல்லட் ரெயில் சிறப்பம்சங்கள் வருமறு:- 

மானிட வளர்ச்சி எப்போதும் போக்குவரத்து சாதனங்களை சார்ந்தே உள்ளது. புல்லட் ரெயில் திட்டத்தால் தான் ஜப்பான் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவின் அதிவேக முன்னேற்றத்திற்கான அடையாளம் புல்லட் ரெயில் திட்டம். புல்லட் ரயில் சராசரியாக மணிக்கு 250 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சமாக 320 கி.மீ. வேகத்திலும் செல்லும்.

508 கிலோ மீட்டர் தூரத்துக்கு புல்லட் ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.புல்லட் ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1,10,000 கோடி. மும்பை - அகமதாபாத் இடையேயான தூரத்தை புல்லட் ரயில் 2 மணி 58 நிமிடங்களில் கடக்கும்.புல்லட் ரயில் 2 .07 மணி நேரத்தில் பாதையை கடக்கும்.

Next Story