பாரிஸ் பருவகால மாற்றம் ஒப்பந்தத்தையும் கடந்து செயல்பட இந்திய தயார் - சுஷ்மா


பாரிஸ் பருவகால மாற்றம் ஒப்பந்தத்தையும் கடந்து செயல்பட இந்திய தயார் - சுஷ்மா
x
தினத்தந்தி 20 Sep 2017 9:21 AM GMT (Updated: 2017-09-20T14:51:49+05:30)

பாரிஸ் பருவகால மாற்ற ஒப்பந்தத்தைக் கடந்தும் செயல்பட இந்தியா தயார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

ஐநா சபை

இந்த சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தின் மீதான தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கு கொண்டு பேசும்போது சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த விவாத களத்தில் முன்னணி நாடாக பங்கேற்று வந்துள்ளது என்றார். 

ஐநா பொதுச்செயலர் அண்டோனியோ குட்டரேஸ் நடத்திய இந்தக் கூட்டதில் பங்கேற்ற போது சுஷ்மா பேசும்போது, “ ஒப்பந்தத்திற்கும் மேலாக இந்தியா செயலாற்றும்” என்றார். வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டிவிட்டர் பதிவில் பருவநிலை மாற்றத்தை இந்தியா தீவிரமாக எடுத்துகொள்கிறது என்றுள்ளார்.

இந்தியாவும், பிரெஞ்சும் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியில் இணைந்துள்ளது என்றும் ரவீஷ் குறிப்பிட்டார்.

இப்பயணத்தில் சுஷ்மா பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார். பல்வேறு கூட்டங்களில் பங்கு பெறவுள்ள அவர் குரூப் ஆஃப் ஃபோர் (ஜி-4) எனும் அமைப்பின் கூட்டத்திலும் பங்கேற்கிறார். பிரேசில், ஜெர்மனி, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் உள்ளன.


Next Story