2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அக்.25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில்  அக்.25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2017 9:31 AM GMT (Updated: 2017-09-20T15:01:15+05:30)

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அக்.25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பெரும் பரபபரப்பை ஏற்படுத்திய வழக்கான 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் டெல்லி சி.பி.ஐ தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டின் முறைகேடு நடைபெற்றதாகவும் இதன் மூலம் நாட்டுக்கு ஒரு லட்சத்துக்கு 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதகவும் சிஏஜி அறிக்கை வெளியிட்டது. 

இது தொடர்பாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகாலமாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வழங்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒருவேளை அக்டோபர் 25-ல் வழங்க முடியவில்லை என்றால் அடுத்த 2 அல்லது 3 தினங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்தார். 

Next Story