குஜராத்தில் ‘வெறித்தனமான வளர்ச்சி’ சமூக வலைதள பிரசாரத்தால் பதறியடிக்கும் பா.ஜனதா!


குஜராத்தில் ‘வெறித்தனமான வளர்ச்சி’  சமூக வலைதள பிரசாரத்தால் பதறியடிக்கும் பா.ஜனதா!
x
தினத்தந்தி 20 Sep 2017 9:50 AM GMT (Updated: 20 Sep 2017 9:50 AM GMT)

குஜராத் மாநிலத்தில் வளர்ச்சி என்ற கோஷத்தை விமர்சனம் செய்யும் விதமான சமூக வலைதள பிரசாரம் அதிகரித்து உள்ளது.



ஆமதாபாத்,

குஜராத் மாதிரியான வளர்ச்சி என்ற கோஷத்துடனே பாரதீய ஜனதா 2014 பாராளுமன்றத் தேர்தலை எதிர்க்கொண்டது. பாரதீய ஜனதா பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியையும் கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்று வரும் சட்டசபைத் தேர்தல்களிலும் பாரதீய ஜனதா வெற்றியை வரிசையாக பதிவு செய்து வருகிறது. பாரதீய ஜனதாவின் பலம் வாய்ந்த மாநிலமாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் இவ்வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

தென் மாநிலங்களை மாநிலங்களை போன்று குஜராத் மாநிலத்திலும் இப்போதே ஆன்-லைன் பிரசாரம் தொடங்கிவிட்டது.

குஜராத் மாநிலத்தில் மோசமான உட்கட்டமைப்புகளை வெளிக்காட்டும் விதமாக சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பாரதீய ஜனதா ஆளும் மாநிலமான குஜராத்தில் இரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் இதுபோன்ற பிரசாரமானது ஆளும் பாரதீய ஜனதாவை கவலையடைய செய்து உள்ளது. பாரதீய ஜனதாவின் ஆட்சியை விமர்சனம் செய்யும் விதமாக சாலை கட்டமைப்பு, வெள்ள நீர் வடிகால் போன்ற பல்வேறு சம்பவங்களை குறிப்பிட்டு பிரசாரம் தொடங்கி உள்ளது. கடந்த இரு வாரங்களாக ‘vikas gando thayo chhe’  என்ற ஹேஷ் டேக் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிற சமூக வலைதளங்களிலும் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வளர்ச்சி என்ற கோஷத்தை விமர்சனம் செய்யும் விதமாக பாடல்கள், மீம்ஸ்கள், ஆடியோ, வீடியோ விமர்சன மீம்ஸ்கள் வைரலாக பரவி வருகிறது. குஜராத் மொழியில் ஹேஷ் டேக் தொடங்கப்பட்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரெயில் கண்டன உயர்வு, வேலைவாய்ப்பின்மை, உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை, ஜிடிபி வளர்ச்சியில் சரிவு, விவசாய கடன் தள்ளுபடி, பசு பாதுகாப்பு, புல்லட் ரெயில் திட்டம் என அனைத்தையும் விமர்சனம் செய்து டுவிட்டரில் மீம்ஸ்கள் பறக்கிறது. நீங்கள் ஜப்பான் பிரதமரை அழைத்து வந்து பிரசாரம் செய்தாலும் தேர்தலில் வெற்றிப்பெற முடியாது, அவருக்கே குடிசைகள் தெரியக்கூடாது என்ற திரைப்போட்டவர்கள் பாரதீய ஜனதாவினர் என விமர்சனம் செய்து டுவிட்டரில் விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

பெரும்பாலும் இளைஞர்கள் இந்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

காங்கிரஸ் கட்சியும் விமர்சனம் செய்து டுவிட்களை பதிவிட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் பருவ மழை முடிந்ததும் சாலைகள் மிகவும் மோசமாகி உள்ளது. இதுதான் வளர்ச்சி பாருங்கள் எனவும் புகைப்படங்கள் விமர்சனங்களுடன் பதிவிடப்பட்டு வருகிறது. பன்றிக் காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்பு, சாலைகளில் ஏற்பட்ட பள்ளம், மாநில அரசின் பேருந்துகளின் நிலை, சாலை ஓரங்களில் குப்பை கொட்டுதல் உள்ளிட்டவற்றை விமர்சனம் செய்து தகவல்கள் பதிவிடப்பட்டு வருகிறது. பிரசாரத்திற்கு குஜராத் மாநில முதல்-மந்திரியும் காங்கிரஸை விமர்சனம் செய்து உள்ளார். பாரதீய ஜனதாவிற்கு எதிரான பிரசாரத்திற்கு இரையாகிவிடாதீர்கள் என மாநில இளைஞர்களுக்கு அமித்ஷா அறிவுரை வழங்கிஉள்ளார். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, வேலைவாய்ப்பு குறைவு போன்றவற்றில் பதிலடி கொடுக்கமுடியவில்லை என பா.ஜனதா தலைவர்களே ஒப்புதல் தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சர்தார் படேல் பேசுகையில், “பிரசாரமானது வெற்றியை கண்டு உள்ளது, பாரதீய ஜனதா ஆதரவாளர்கள் கூட இந்த பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்,” என கூறிஉள்ளார். 

தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவை கேலி செய்தும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா நிர்வாகியாக உள்ள மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, இதுதொடர்பாக மாநில தலைமைகளிடம் பேசிஉள்ளார். மாநில தலைமைகளின் பதிலில் அவர் அதிருப்தி அடைந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியது. எதிர்மறையான தகவல்களுக்கு பதிலளிக்க வேண்டாம், இதுதொடர்பாக மீடியாக்களில் பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார், மாறாக மாநிலத்தில் அரசு மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசுங்கள் என பேசிஉள்ளார். 

Next Story