மும்பையில் கனமழை: இன்டர் சிட்டி ரெயில்கள் ரத்து


மும்பையில் கனமழை: இன்டர் சிட்டி ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 20 Sep 2017 5:46 PM GMT (Updated: 20 Sep 2017 5:46 PM GMT)

மும்பையில் கன மழை காரணமாக இன்றும், நாளையும் (செப் 21) இன்டர் சிட்டி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த மாத இறுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. இந்த நிலையில், மீண்டும்  நேற்று மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது. நாள் முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன போக்குவரத்து முடங்கியது.

மும்பையில் போக்குவரத்து உயிர்நாடியாக கருதப்படும் மின்சார ரெயில் போக்குவரத்திலும் பாதிப்பு உணரப்பட்டது. பல மின்சார ரெயில்கள் தாமதமாக இயங்கின. சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 

மேலும் மும்பையில் இருந்து புனே, மன்மாடு ஆகிய இடங்களுக்கு செல்லும் 6 நீண்ட தூர ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மும்பையில் இருந்து வெளியூர் செல்லும் சில ரெயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டன.

இந்தநிலையில் இன்றும் நாளையும் (செப் 21) 6 இன்டர் சிட்டி ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Next Story