திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை


திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
x
தினத்தந்தி 20 Sep 2017 6:54 PM GMT (Updated: 2017-09-21T00:24:21+05:30)

திரிபுரா மான்ட்வாய் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவாய்,

திரிபுரா மாநிலம் கோவாய் பகுதிகளில் இரு பிரிவினரிடையே  மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக வெடித்தது. இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் டிவி சேனல் நிருபர் சாந்தனு போம் விக் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கலவரம் பரவாமல் தடுக்க கோவாய் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

டி.வி.நிருபர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து முதல்-மந்திரி வீடு முன்பாக பத்திரிக்கையாளர்கள் கோஷம் எழுப்பியபடி தர்ணாவில் ஈடுபட்டனர். 


Next Story