டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்


டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:30 PM GMT (Updated: 2017-09-21T01:52:38+05:30)

தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 67–வது நாளாக நீடித்தது.

புதுடெல்லி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 67–வது நாளாக நீடித்தது.

இதையொட்டி விவசாயிகள் தங்களது முகத்தில் கரியை பூசிக்கொண்டு ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது, விவசாயிகளின் முகத்தில் பிரதமர் மோடி கரியை பூசி ஏமாற்றி விட்டதாக கோ‌ஷம் எழுப்பினார்கள்.


Next Story