முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை


முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
x
தினத்தந்தி 21 Sep 2017 5:09 AM GMT (Updated: 2017-09-21T10:38:55+05:30)

கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணா மருமகன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகனான விஜி சிதார்தாவுக்கு சொந்தமான அலுவலங்களில் இன்று வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, சென்னை, மும்பை, சிக்மளூர் உள்ளிட்ட 20 இடங்களில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

சித்தார்த் மீதான வரிஏய்ப்பு புகார் தொடர்பாக, இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கர்நாடக மின்துறை அமைச்சர் சிவக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் கோடிக்கணக்கில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த பரபரப்பு முற்றிலுமாக அடங்குவதற்குள், கர்நாடக முன்னாள் முதல்வரின் மருகன் வீட்டில் தற்போது சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய எஸ்.எம்.கிருஷ்ணா, அக்கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஐக்கியமானது நினைவிருக்கலாம். 


Next Story