தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது | ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது | ஈராக்கில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்போம் - பிரதமர் மோடி | மாணவிகள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டு ஜேஎன்யூ பேராசிரியர் அதுல் ஜோரி கைது |

தேசிய செய்திகள்

கூர்க் விடுதியில் உள்ள ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டிடிவி தினகரன் சந்திப்பு + "||" + TTVDhinakaran arrives at Paddington Resorts in Coorg where 18 MLAs supporting him are staying

கூர்க் விடுதியில் உள்ள ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டிடிவி தினகரன் சந்திப்பு

கூர்க் விடுதியில் உள்ள ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டிடிவி தினகரன் சந்திப்பு
கூர்க் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவு எம்.எல்.ஏக்களை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.
கூர்க், 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் தனித்தனியாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

அதே நேரத்தில் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எதையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதுவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.களுக்கு ஆறுதலாக உள்ளது.

இவர்களில் முன்னாள் அமைச்சர்களான எம்.எல். ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இருவரும் மைசூர் குடகுமலையில் உள்ள விடுதியை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் மட்டுமே அங்கு உள்ளனர்.

இவர்களோடு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தின சபாபதி ஆகியோரும் தங்கி உள்ளனர். அவர்களை சந்திக்க அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளார் தினகரன் நேற்றிரவு பெங்களூரு சென்றார். இன்று  பெங்களூருவில் இருந்து காரில் புறப்பட்டு கூர்க் சென்றார். அங்கு, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.