மும்பையில் வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து; 5 பேர் உயிருடன் மீட்பு


மும்பையில் வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து; 5 பேர் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 23 Sep 2017 9:44 AM GMT (Updated: 2017-09-23T15:14:47+05:30)

மும்பையில் வர்த்தக கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

மும்பை,

மும்பையில் கந்திவலி கிழக்கு பகுதியில் அசோக் நகரில் 3 அடுக்குகள் கொண்ட வர்த்தக கட்டிடத்தின் 2வது தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து காலை 10.20 மணியளவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை அணைப்பதற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இந்த கட்டிடத்திற்குள் 4 முதல் 5 பேர் இருந்துள்ளனர். அவர்களை ஏணியின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை.


Next Story