எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் துப்பாக்கி சூடு; 2 இந்திய வீரர்கள் காயம்


எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் துப்பாக்கி சூடு; 2 இந்திய வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 24 Sep 2017 7:15 AM GMT (Updated: 2017-09-24T12:45:43+05:30)

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட பலகோட் பகுதியில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது.

இந்த சம்பவத்தினை அடுத்து இந்திய பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டை 30 நிமிடங்கள் வரை நீடித்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 2 இந்திய படை வீரர்கள் காயமடைந்தனர்.  பாகிஸ்தான் துப்பாக்கி சூடு சம்பவத்தினால் எல்லையில் வசித்து வந்த 100க்கும் மேற்பட்டோர் அரசால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல்கள் அதிகரித்து உள்ளன.


Next Story