பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது


பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது
x
தினத்தந்தி 24 Sep 2017 12:27 PM GMT (Updated: 2017-09-24T17:57:38+05:30)

பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்துள்ளது.

உஸ்மனாபாத்,

மகாராஷ்டிராவில் உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் இன்று மதியம் 12.03 மணியளவில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு பாவனா சந்தோஷ் ஜாதவ் என பெற்றோரால் பெயரிடப்பட்டு உள்ளது. பிறந்த குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர்.

இந்நிலையில், 12.09 மணியளவில் ஆன்லைன் வழியே அந்த பெண் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆதார் எண்ணும் கிடைத்துள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ண கேம் தெரிவித்துள்ளார்.

இது உஸ்மனாபாத்திற்கு பெருமை சேர்க்கும் விசயம் என கூறிய அவர், ஆதார் எண் பெறுவதற்கு அனைத்து குழந்தைகளையும் விரைவில் பதிவு செய்வோம் என கூறியுள்ளார். அவற்றை பெற்றோரின் ஆதார் அட்டைகளுடன் இணைக்கும் பணியையும் மேற்கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்தில் பிறந்த அனைத்து 1,300 குழந்தைகளும் ஆதார் எண்களை பெற்றுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story