குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசார யாத்திரை


குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசார யாத்திரை
x
தினத்தந்தி 24 Sep 2017 11:45 PM GMT (Updated: 2017-09-25T01:19:09+05:30)

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் இன்று தேர்தல் பிரசார யாத்திரையை தொடங்குகிறார்.

புதுடெல்லி,

குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பல ஆண்டுகளாக பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாரதீய ஜனதா செல்வாக்கு பெற்று விளங்குகிறது. அங்கு தற்போது விஜய் ரூபானி முதல்–மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் கடுமையாக பாடுபட்டு ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் மிகவும் தீவிரமாக இருக்கிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த வேலைகளை அந்த கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இந்த மாத தொடக்கத்தில் குஜராத் சென்று காங்கிரசின் வெற்றி வாய்ப்பு குறித்து ஆய்வு செய்ததோடு, தொண்டர்கள் கூட்டத்தில் பேசினார். குஜராத்தில் இன்று அவர் தனது தேர்தல் பிரசார யாத்திரையை தொடங்குகிறார்.


Next Story