காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 24 Sep 2017 11:15 PM GMT (Updated: 2017-09-25T01:19:11+05:30)

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள யூரி பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கும், மாநில போலீசுக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து இரு தரப்பினரும் நேற்று அதிகாலை அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது கல்காய் என்ற இடத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே பாதுகாப்பு படையினர் அவர்களை சரண் அடையுமாறு எச்சரித்தனர்.

ஆனால் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் துப்பாக்கியால் பயங்கரவாதிகள் சுடத்தொடங்கினர். இதனால் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பல மணி நேரம் நடந்த இந்த என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில் சில ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் காயம் அடைந்தனர்.


Next Story