சிஏஜி தலைவராக ராஜிவ் மெகரிஷி நியமனம்: ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்


சிஏஜி தலைவராக ராஜிவ் மெகரிஷி நியமனம்: ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
x
தினத்தந்தி 25 Sep 2017 5:15 AM GMT (Updated: 25 Sep 2017 5:15 AM GMT)

சிஏஜி தலைவராக ராஜிவ் மெகரிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதுடெல்லி,

இந்தியாவின் மிக முக்கியமான தன்னாட்சி அந்தஸ்து பெற்ற மத்திய கணக்கு மற்றும் தணிக்கை (சி.ஏ.ஜி) அமைப்பானது அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்குமான வரவு மற்றும் செலவுகளை சரிபார்க்கிறது. இந்த கணக்கு அறிக்கையை பாராளுமன்றம் மற்றும் அந்தந்த மாநில சட்டசபைகளில் தாக்கல் செய்கிறது.

இந்த அமைப்பின்  தலைவராக உள்ள சஷிகாந்த சர்மாவின் பதவிக்காலம்  23-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சக செயலாளராக இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற ராஜீவ் மெகரிஷி சி.ஏ.ஜி.யின் புதிய தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கபட்டது.  

இதற்கான அறிவிப்பை மத்திய நிர்வாகம் மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சகம்  வெளியிட்டது. இந்த நிலையில், இன்று காலை சிஏஜி தலைவராக ராஜீவ் மெகரிஷி பதவியேற்றார். ராஜீவ் மெகரிஷிக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  துணை ஜனாதிபதி வெங்கையா நயுடு, பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story