சவுதி அரேபியாவில் இருந்து மீடக்கபட்ட பெண் விலங்கு போல் கொடுமைப் படுத்தப்பட்டதாக புகார்


சவுதி அரேபியாவில் இருந்து மீடக்கபட்ட பெண் விலங்கு போல் கொடுமைப்  படுத்தப்பட்டதாக புகார்
x
தினத்தந்தி 25 Sep 2017 9:13 AM GMT (Updated: 2017-09-25T14:42:46+05:30)

சவுதி அரேபியாவில் இருந்து மீடக்கபட்ட பெண் விலங்கு போல் கொடுமைப்படுத்தப்பட்டதாக புகார் கூறி உள்ளார்.

மங்களூரு,

கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் ஜெசிந்தா மென்டோங்கா (42).  மும்பை நிறுவனம் மூலம் கத்தார் நாட்டிற்கு வேலலைக்குச் சென்றார்.

ஆனால் அவர் கத்தாருக்கு அழைத்துச் செல்லப்பட வில்லை. முதலில் அவரை துபாய்க்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சவுதி அரேபியாவுக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள யன்பு என்ற இடத்தில் ஒருவரது வீட்டில் வேலைக்கார பெண்ணாக பணியமர்த்தப்பட்டார். அங்கு அவர் மிகவும் கொடுமைப் படுத்தப்பட்டார். நாள் முழுவதும் இடைவிடாது அவரிடம் வேலை வாங்கி அடிமையாக நடத்தப்பட்டார். வீட்டு எஜமானரின் 3 மேன்சன்களுக்கும் சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தினார்கள்.

மேலும் அவரது 3 மனைவிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் வேலை செய்ய வேண்டும் அவர்களது குழந்தைகள் ஜெசிந்தாவை ‘அடிமை’ என அழைத்தனர். வீட்டை விட்டு வெளியே விடாமல் அடைத்து வைத்திருந்தனர். கடந்த நவம்பர் மாதம் அங்கிருந்து தப்ப முயன்றார்.  அவரை போலீசார் பிடித்து மீண்டும் வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடியதற்காக கடுமையாக அடித்து உதைக்கப்பட்டார். தலையை சுவற்றில் மோத வைத்து காயப்படுத்தப்பட்டார். அப் போது குடிக்க தண்ணீர் கூட தரவில்லை.

இவரது  பரிதாபமான நிலை அறிந்த உடுப்பி மனித உரிமைகள்  பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனத்தினர் சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்  நல உரிமை அமைப்பினரிடம் தொடர்பு கொண்டனர்.

பின்னர் அவர்கள் இந்திய தூதரகம் மற்றும்  சவுதி அரேபியா அரசுடன் தொடர்பு கொண்டு ஜெசிந்தாவை மீட்டனர். தற்போது உடுப்பி  திரும்பிய ஜெசிந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு நல்ல வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்து சென்ற நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வலியுறுத்தினார். இனி ஒரு போதும் வளைகுடா நாட்டுக்கு செல்ல மாட்டேன் என திட்டவட்டமாக  தெரிவித்தார்.

Next Story