ஏழை மக்களுக்காக முக்கிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி அறிவிக்கிறார் - அருண் ஜெட்லி


ஏழை மக்களுக்காக முக்கிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி அறிவிக்கிறார் - அருண் ஜெட்லி
x
தினத்தந்தி 25 Sep 2017 12:31 PM GMT (Updated: 2017-09-25T18:01:27+05:30)

ஏழை மக்களுக்காக மாலை 6.30 மணிக்கு முக்கிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி அறிவிக்கிறார் என அருண் ஜெட்லி கூறிஉள்ளார்.புதுடெல்லி,


மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், ஏழை மக்களுக்காக மாலை 6.30 மணிக்கு முக்கிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி அறிவிக்கிறார் என்றார். கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிகழ்ச்சி நிரலில் கிடையாது, எனவே நாங்கள் இயற்கையாகவே ஏதாவது நடவடிக்கையை எடுத்தால், அவர்கள் அதனால் பெரும் அமைதியற்று ஆகிவிடுவார்கள். ஊழலுக்கு எதிரான போரானது சமரசம் செய்துக்கொள்ள முடியாதது என பிரதமர் மோடி கூறிஉள்ளார் என பேசிஉள்ளார் அருண் ஜெட்லி.

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா, ராம் மாதவ் உள்பட மூத்த தலைவர்கள் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை அவருடைய வீட்டில் சந்தித்து பேசிஉள்ளனர். 


Next Story