20 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து குர்மீத் சிங் மேல்முறையீடு


20 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து குர்மீத் சிங் மேல்முறையீடு
x
தினத்தந்தி 25 Sep 2017 11:45 PM GMT (Updated: 2017-09-26T03:48:51+05:30)

தனது பெண் சீடர்களை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 20 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து குர்மீத் சிங் மேல்முறையீடு.

சண்டிகார்

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீ்ம் சிங், தனது பெண் சீடர்களை கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கடந்த மாதம் 28-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. 

அவர் ரோதக் மாவட்டத்தில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து குர்மீத் சிங் சார்பில் நேற்று பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், ‘கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களின் வாக்குமூலங்களை 6 ஆண்டுகள் தாமதத்துக்கு பிறகுதான் சி.பி.ஐ. பதிவு செய்தது. வாக்குமூலத்தின் சில பகுதிகளை மறைத்து விட்டது. இதுபோன்ற தவறுகள் இருப்பதால், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.


Next Story