எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவல் முறியடிப்பு; தீவிரவாதி சுட்டு கொலை


எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவல் முறியடிப்பு; தீவிரவாதி சுட்டு கொலை
x
தினத்தந்தி 26 Sep 2017 4:56 AM GMT (Updated: 2017-09-26T10:26:42+05:30)

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தீவிரவாத ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம் ஒரு தீவிரவாதியை சுட்டு கொன்றது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் உரி பகுதியில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியில் ஜொராவர் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனை அறிந்த ராணுவத்தினர் ஊடுருவலை முறியடிக்க துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் இருந்து ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. தீவிரவாதிகளுடனான மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது என தகவல் தெரிவிக்கின்றது.


Next Story