எல்லையில் தாக்குதல் நடத்தியவாறு பாகிஸ்தான் ராணுவம் முன்னேற முயற்சி; இந்திய ராணுவம் பதிலடி


எல்லையில் தாக்குதல் நடத்தியவாறு பாகிஸ்தான் ராணுவம் முன்னேற முயற்சி; இந்திய ராணுவம் பதிலடி
x
தினத்தந்தி 26 Sep 2017 12:16 PM GMT (Updated: 2017-09-26T17:46:21+05:30)

எல்லையில் தாக்குதல் நடத்தியவாறு முன்நோக்கி நகர்ந்த பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.


ஸ்ரீநகர்,


 ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அடாவடி கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் கண்மூடித்தனமாக தக்குதல் நடத்தியதை அடுத்து எல்லைக் கிராமங்களில் இருந்து மக்களை இந்திய ராணுவம் வெளியேற்றியது. 

இந்நிலையில் குபுவாராவில் பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை படையை சேர்ந்த ராணுவ வீரர்கள், இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியவாறே முன்நோக்கி வந்து உள்ளனர். இதனையடுத்து இந்திய எல்லை பாதுகாப்பு படை அவர்களுக்கு சரியான பதிலடியை கொடுத்து விரட்டியது. குபுவாராவின் கெரான் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்திய வண்ணம் இந்தியாவிற்கு ஊருவ முயற்சி செய்து உள்ளனர். இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து உள்ளது. சம்பவ இடத்தில் இருந்து கடைசியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி இருதரப்பு இடையேயும் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிகிறது.

இந்திய ராணுவ நிலைகளை சிதைக்கும் வண்ணம் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளே வந்து உள்ளனர் எனவும், இந்திய ராணுவம் அதனை முறியடித்து உள்ளது. 

இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவம் தரப்பில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் கிடையாது. பாகிஸ்தான் வீரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். 

எல்லையில் இருதரப்பு இடையேயும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக பயங்கரவாதிகளையும் இந்தியாவிற்கு ஊருவ செய்ய முயற்சி செய்கிறது. உரி செக்டாரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நால்வரை இந்திய ராணுவம் வேட்டையாடியது. இதற்கிடையே பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியாவிற்குள் ஊடுருவ செய்ய முயற்சி செய்தால் மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் பாகிஸ்தானில் முன்னெடுக்கப்படும் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் இந்நகர்வில் ஈடுபட்டு உள்ளது.


Next Story