பிறந்தநாளையொட்டி மன்மோகன் சிங்குக்கு பிரதமர் வாழ்த்து


பிறந்தநாளையொட்டி மன்மோகன் சிங்குக்கு பிரதமர்  வாழ்த்து
x
தினத்தந்தி 26 Sep 2017 11:45 PM GMT (Updated: 2017-09-27T04:47:01+05:30)

முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்கிற்கு நேற்று 85-வது பிறந்தநாள் ஆகும். அவருடைய பிறந்ததினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

புதுடெல்லி

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த நன்னாளில் நீங்கள் நீண்ட ஆயுளும், நிறைந்த உடல் நலமும் பெற்றிட வேண்டுகிறேன்” என்று கூறி உள்ளார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய மந்திரிகள் சுரேஷ் பிரபு, வீரேந்திர சிங் ஆகியோரும் டுவிட்டர் மூலம் மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story