ராஜஸ்தானில் பக்தர்கள் கூட்டத்திற்குள் பாய்ந்த கார் 7 பேர் பலி


ராஜஸ்தானில் பக்தர்கள் கூட்டத்திற்குள் பாய்ந்த கார் 7 பேர் பலி
x
தினத்தந்தி 27 Sep 2017 4:14 AM GMT (Updated: 2017-09-27T09:44:30+05:30)

ராஜஸ்தானில் பக்தர்கள் கூட்டத்திற்குள் கார் பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியானார்கள்.ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் தாவுல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு  பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றுள்ளனர். இன்று அதிகாலை காரா ஆற்றின் அருகே அவர்கள் கூட்டமாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த கார் தறி கெட்டு ஓடி பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.  

இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் கதறி அடித்து ஓடினர். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15-க்கும் அதிகமானோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி  மேலும் மூவர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story