சிறுமிகள் திருமண விவகாரம் : மேலும் 3 ஓமன் நாட்டு முதியவர்கள் கைது


சிறுமிகள் திருமண விவகாரம் : மேலும் 3 ஓமன் நாட்டு முதியவர்கள் கைது
x
தினத்தந்தி 27 Sep 2017 5:26 AM GMT (Updated: 2017-09-27T10:56:43+05:30)

ஐதராபாத்தில் சிறுமிகளை வளைகுடா நாட்டு முதியவர்கள் திருமணம் செய்து கொள்ளும் விவகாரத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ரூ.5 லட்சம் கொடுத்து திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் வெளி உலகிற்கு தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் தாயார் போலீஸில் புகார் கொடுத்தபோதுதான் சிறுமியின் உறவினர்கள், முகவர்கள் பணம் வாங்கிக்கொண்டு சிறுமியை முதியவருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு வந்ததாகக் கூறி திருமணம் புரிய சிறுமியை தேட வந்த ஓமன் நாட்டவரான அல் ஷெயாதி சுலைமானை போலீசார் கைது செய்தனர். சுலைமான் திருமணம் புரிய சிறுமியை தேடித்தருவதற்காக, அவருடன் வந்த தரகர் அல் ஷெயாதி முகமது கல்பானும் கைது செய்யப்பட்டார். இது தவிர ஓமன் நாட்டு முதியவரை அழைத்து வந்த, அந்நாட்டை சேர்ந்த அல் ஆவ்தி யாசிர் என்பவரையும் ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர். இது தவிர இந்தியர்கள் இருவரும் இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். வளைகுடா முதியவர்களுக்கு ஹைதராபாத் சிறுமிகளை திருமணம் செய்து வைத்த விவகாரம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story