மத்திய பிரதேசம்: ஜோதிராதித்ய சிந்தியாவை முன்னிறுத்தி காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது


மத்திய பிரதேசம்: ஜோதிராதித்ய சிந்தியாவை முன்னிறுத்தி காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது
x
தினத்தந்தி 27 Sep 2017 9:19 AM GMT (Updated: 2017-09-27T14:48:54+05:30)

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ளது.


போபால்,


குஜராத்தை அடுத்து பாரதீய ஜனதாவின் மற்றொரு கோட்டையாக பார்க்கப்படும் மாநிலம் மத்திய பிரதேசம். 2003-ம் ஆண்டிலிருந்து பாரதீய ஜனதா கட்சியே ஆட்சி செய்து வருகிறது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 165 தொகுதிகளை கைப்பற்றியது. 2014 பாராளுமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளில் 27 தொகுதிகளை தன்வசப்படுத்தியது பா.ஜனதா.

மத்திய பிரதேச மாநில சட்டசபையின் காலம் அடுத்த வருடம் தொடக்கத்தில் முடிவுக்கு வருகிறது. மத்திய பிரதேச மாநில சிவராஜ் சிங் சவுகான் அரசு விவசாயிகள் விவகாரத்தில் பெரும் விமர்சனங்களை எதிர்க்கொண்டது. காங்கிரஸ் இப்போது மாநிலத்தில் கட்சியின் இளம் தலைவர்களின் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவை முதல்-மந்திரி வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. சிந்தியாவின் பாராளுமன்ற தொகுதியன குனாவில் இந்த அறிவிப்பை கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத் வெளியிட்டு உள்ளார். 

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜோதிராதித்ய சிந்தியாவை முன்னிறுத்துவதில் எந்தஒரு எதிர்ப்பும் கிடையாது என கமல் நாத் குறிப்பிட்டு உள்ளார். 

Next Story